• சற்று முன்

    பெங்களூர் ரவுடி ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் வெட்டி படுகொலை : தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை


    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் தனியார் லே-அவுட்டில் உள்ள பஷீர் என்பவர் வீட்டில் பெங்களூரை சேர்ந்த ரவுடி இஸ்மாயிலை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளார். பெங்களூர் பொம்மனஹள்ளி பகுதியை சேர்ந்த ரவுடி இஸ்மாயில் இவர் மீது பொம்மனஹள்ளி, மடிவாளா, உள்ளிட்ட பகுதிகளில் மூன்று  கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.  

    இந்த நிலையில் கடந்த பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் சுயேச்சை  வேட்பாளராக போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் தோல்வி அடைந்த இவர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துளர். இந்நிலையில் இன்று ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் உள்ள தன் நண்பன் பஷீர் என்பவர் வீட்டுக்கு வந்துள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 6 பேர் கொண்ட கும்பல் innova காரில் பின் தொடர்ந்து வந்து. பஷீர்  வீட்டிற்குள் கத்தி அருவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்த மர்ம கும்பல் இஸ்மாயில் சராமரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

     இவர்கள் அனைவரும் முகமூடி அணிந்து வந்து இந்த குற்றச் செயலில் ஈடுபட்டு,  இதற்கு பயன்படுத்திய ஆயுதங்களை அங்கியை வீசி சென்றுள்ளார். இதையடுத்து, பஷீர் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதனடிப்படையில் தேன்கனிக்கோட்டை போலீசாரும் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இஸ்மாயில் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad