Header Ads

 • சற்று முன்

  முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் எங்கள் சகோதரர் - எங்களுடன் இணைந்து பணியாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது - அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ


  விளாத்திகுளம் அருகே அயன் கரிசல் குளத்தில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பி. சின்னப்பனை ஆதரித்து அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.  அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, வரும் மக்களவைத் தேர்தலில் வலிமையான பாரதம் திறமையான பிரதமர் என்ற இலக்கோடு தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் பல கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தர உள்ளன. 

  உலகிலேயே இந்தியா பெரிய ஜனநாயக நாடு. அந்த வகையில் திறமையான பிரதமராக வலிமைமிக்க பாரதத்தை உருவாக்க வேண்டும் என்றால், நரேந்திர மோடி மீண்டும்  என்ற முழக்கத்தோடு தேர்தலை சந்திக்கிறோம். ஆனால் திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியில் யார் பிரதமர் என்று சொல்லக்கூட திராணியற்று தேர்தலை சந்திக்கின்றன. நடைபெற இருப்பது மக்களவைத் தேர்தல். இதில் பிரதமர் யார் என்பதை முன்மொழிந்து தேர்தலை சந்தித்தால் தான் நாட்டின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் உகந்ததாக இருக்கும். நாங்கள் வெற்றிக் கூட்டணி அமைத்து உள்ளோம். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். 


  அதேபோல் தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் எப்போதுமே அதிமுகவின் எஃகு கோட்டை. அதிமுக சார்பில் அடிமட்ட தொண்டன் நின்றால் கூட பல ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வரலாறு உண்டு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரு உருவங்களாக ஓபிஎஸ் மற்றும் பிபிஎஸ் ஆகிய பார்க்கப்படுகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேட்பாளரை அறிவித்தால் எப்படி ஏற்றுக் கொள்வார்களோ அதே போல் இப்போது விளாத்திகுளம் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் சின்னப்பனை ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்தத் தொகுதியில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என இலக்கு நிர்ணயித்துள்ளோம். 

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு தமிழகத்தில் புற்றீசல் போல் ஏராளமான கட்சிகள் உருவாகியுள்ளன. மழைக்காலங்களில் டீசல் தோன்றும். ஆனால் தோன்றிய வேகத்தில் காணாமல் போய்விடும். இந்தத் தேர்தலோடு அது போன்ற கட்சிகளுக்கெல்லாம் முடிவு வந்து விடும். 

  மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்கள் ஒரு நிலைப்பாட்டில் இருக்க மாட்டார்கள் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். இதனை செந்தில் பாலாஜி போன்றவர்கள் நிறுத்திவிட்டனர். இதில் நான் யாரையும் திரித்துக் கூறவில்லை. பொதுவான நடைமுறையை கூறினேன். தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தால் மாவட்ட அமைச்சர் என்ற முறையில் அவரது வெற்றிக்கு சிறப்பான வெற்றியைப் பெற்றுத் தரவே என்றுதான் கூறியிருந்தேன். இதில் நான் யாரையும் மையப்படுத்தி பெயரை குறிப்பிட்டு சொல்லவில்லை. 

  இன்றைக்கும் அந்த நண்பர்(முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்) சுயேச்சையாக போட்டியிடப்போவதாக பேட்டி அளித்துள்ளார். இன்னமும் காலம் கடந்து போகவில்லை.  வேட்புமனுத்தாக்கல் மற்றும் வாபஸ், இறுதிப் பட்டியல் வரை நாங்கள் பொறுத்திருப்போம்.  விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலைப் பொருத்தவரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் உட்பட 17 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் அனைவரிடமும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தினர். 

  1984- ல் நான் விளாத்திகுளம் தொகுதியில் தேர்தல் பணியாற்றியுள்ளேன். 1998ல் கடம்பூர் ஜனார்த்தனம் போட்டியிட்டபோது விளாத்திகுளம் தொகுதியில் பொறுப்பாளராக இருந்து தேர்தல் பணியாற்றினேன். விளாத்திகுளம் அதிமுகவின் கோட்டை என்பதை நான் நன்கு அறிந்தவன். சேவல் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் காக நான் விளாத்திகுளத்தில் வந்து பணியாற்றியுள்ளேன். எனவே எனக்கு நீண்ட கால அனுபவம் உண்டு. இங்குள்ள தொண்டர்கள் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவை தவிர யாரையும் பொருட்டாக எண்ணியது கிடையாது. 

  எனவே இந்த நிமிடம் வரை அவர் என்ன கூறினாலும் அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. நாங்கள் சகோதரராகவே பார்க்கிறோம். அதிமுக என்பது ஒரு கூட்டு குடும்பம். அந்த குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் வரும். தேர்தல் நேரத்தில் யாரும் மனக்குறைவு அடைவார்கள். அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் விதமாக மீண்டும் அவர் எங்களுடன் வந்து பணியாற்றுவார் என நம்பிக்கையுடன் இருக்கிறோம். வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் வந்தவுடன்என்ன நிலைப்பாடு வருகிறதோ அதற்கு தகுந்தார் போல வியூகம் அமைத்து வெற்றி பெறுவோம், என்றார் அவர்.

  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad