வாணியம்பாடியில் ரயில் நிலையத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை
வேலூர் மாவட்டம் ஆலங்காயம் பெத்தூர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்தார். இவரது பிள்ளைகள் சரியாக கவனிக்கப்படாததால் மனமுடைந்த முதியவர் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் உள்ள நடை மேடை பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ரயில்வே போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை