Header Ads

  • சற்று முன்

    செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பா.ஜனதா பிரமுகர்.


    வந்தவாசியில் பா.ஜனதா பிரமுகர் அரசு அளிக்கும் இலவசங்கள் வேண்டாம் என செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வந்தவாசி அடுத்த பாதூரை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 45). பா.ஜ.க. வந்தவாசி ஒன்றிய இளைஞர் அணி செயலாளராக உள்ளார். இவர் இன்று காலை 10 மணியளவில் கீழ்கொடுங்காலூர் கூட்டுசாலையில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி நின்று தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் கீழே இறங்கும்படி கூறினர். மறுத்த அவர் கீழே குதிக்க போவதாக மிரட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கீழ்கொடுங்காலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெய்சங்கரை கீழே வரும்படி அழைத்தனர். அப்போது ஜெய்சங்கர் கையில் வைத்திருந்த 2 பக்கம் கொண்ட கோரிக்கை மனுவை கீழே வீசினார். அதில் கூறியிருப்பதாவது:-

    அரசு அளிக்கும் இலவச பொருட்களோ அல்லது வாக்காளர்களுக்கு பணம் அளிக்கபடுவதாலே இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் மகிழ்ச்சியாக வாழவைக்க முடியாது. 18 வயது பூர்த்தி அடைந்த ஆண், பெண்கள் ஒட்டுனர் உள்ளிட்ட எந்த பணியில் இருந்தாலும் பணி நிரந்தரம் செய்வதுடன் அரசின் விதிப்படி அனைத்து பிடித்தங்களும் பிடித்து அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.350 கூலி தொகை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. செல்போன் டவரில் உச்சியில் நின்றவரை வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான வீரர்கள் கயிரை கட்டி பாதுகாப்புடன் மீட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

     செய்தியாளர் திருவண்ணாமலை வி மூர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad