Header Ads

  • சற்று முன்

    ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே பல குழுக்களாக பிரிந்து வலம் வரும் காட்டுயானைக்கூட்டம், 20 கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை


    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை  அருகே அய்யூர்
    வனப்பகுதியில் தற்போது 30க்கும் அதிகமான காட்டுயானைகள் பல குழுக்களாக பிரிந்து வலம் வருகின்றன.

    தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் தேன்கனிக்கோட்டை - பெட்ட முகிலாளம் சாலையின் அய்யூர் வனப்பகுதியில் சாமி ஏரி என்னுமிடத்தில் யானைகள் நீரை அருந்தி தாகம் தனித்து வருகின்றன.

    உணவு தேடி கிராம பகுதிகளுக்கு செல்லும் காட்டுயானைகள்,சில நாட்களுக்கு முன்பாக சத்துணவு  ஊழியப்பெண் ராஜம்மா என்பவரை ஒற்றை யானை தாக்கியதில் பலியானார், நேற்றுமுன் தினம் கெலமங்கலம் பகுதியில் யானை தாக்கி ஸ்ரீராம் என்பவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    பொதுமக்கள் பாதுகாப்புக்கருதி அய்யூர் காப்புக்காடு சுற்றி உள்ள பெட்ட முகிலாளம்,                          உனிசெட்டி, மேலூர்,                    ஜவனசந்திரம், காமகிரி, காலிகட்டம்,கட்டகிரி,கொடகறை உள்ளிட்ட 20 கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து பிரச்சாரம் மேற்க்கொண்டு வருகின்றனர்.

    இரவு நேர பயணங்களை தவிர்த்து, யானைகள் வந்து செல்லும் ஒத்தையடி பாதகைகளில் செல்வதை மாற்றிக்கொள்ள வேண்டும், அய்யூர் வனப்பகுதிகளில் யானைகள் எந்த நேரத்திலும் நடமாடலாம் என்பதால் பாதுகாப்புடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது,

    மேலும் வாகனங்களில் செல்வோர், யானைகள் சாலையை கடக்கும் போது சென்றுவிட்டனவா என்பதை உறுதி செய்தபின்பே இயக்க வேண்டும், இரவு நேரங்களில் வீட்டின் முன்பாக விளக்குகளை தொடர்ந்து எறிய விட வேண்டும் மேலும் யானை கூட்டங்களை பார்த்து கூச்சல் எழுப்பி, கற்களால் தாக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    30 காட்டுயானை கூட்டம் பல குழுக்களாக பிரிந்து கிராம பகுதி ஒட்டிய வனப்பகுதிகளில் சுற்றித்திரிவதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது, அசம்பாவிதங்களை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad