Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவகம் முன்பு 150 மேற்ப்பட்ட ஆதி திராவிட மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


    திருப்பத்தூர் சார் ஆட்சியரிடம் 40 ஆண்டு கோரிக்கையான இலவச வீட்டுமனை உடனடியாக வழங்க  கோரி 150க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொரட்டி கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் 150 குடும்பங்களும் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் 40 வருடங்களுக்கு முன்பு இலவச வீட்டுமனை வழங்க கோரி அரசிடம் பலமுறை மனு அளித்த பிறகு கடந்த 1989 ஆம் ஆண்டு தமிழக அரசினால் அவர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்து அரசானை பிறப்பித்து உள்ளது ஆனால் இதுவரை அந்த இடத்தில் பட்டா இல்லாமல்  பயந்து வீடு கட்ட முடியாமல் அப்பகுதி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இக்காரணத்தால்  அப்பகுதி மக்கள் இன்று திருப்பத்தூர் சார் ஆட்சியரிடம் சென்று தங்கள் நீண்ட நாள் கோரிக்கையான வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி  திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றனர். திருப்பத்தூர் சார் ஆட்சியர் இல்லாத காரணத்தால் காலை முதலே பொதுமக்கள் சார் ஆட்சியர் அவரை நேரில் பார்த்து விட்டு தான் செல்வோம் என அனைவரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    செய்திகளை உடனுக்குடன் அறிய nms today youtube சேனல் பார்க்கவும் 

    செய்தியாளர் : திருப்பத்தூர் -  நித்தியானந்தம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad