Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலை அயன்குளத்தில் 100 ஆண்டு பழமை வாய்ந்த அரச மரம் வேருடன் சாய்ந்தது


    திருவண்ணாமலை அய்யங்குளத்தெருவில் உள்ள அய்யங்குளத்தின் அருகில் அரச மர விநாயகர் கோவில் உள்ளது. கோவிலின் உள்ள அரச மரம் 100 ஆண்டுக்கு மேல் பழமையான மரம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை சுமார் 6 மணியளவில் இந்த அரச மரம் திடீரென வேர் பகுதியில் இருந்து முறிந்து 2 பாகங்களாக உடைந்த சரிந்து விழுந்தது. ஒரு பகுதி கோவில் முன் பகுதியிலும், மற்றொரு பகுதியில் அய்யங்குளத்தின் சுற்றுச் சுவரின் மீதும் விழுந்தது இதனால் கோவில் மற்றும் குளத்தின் சுற்றுச் சுவரில் சேதம் ஏற்பட்டது. உடைந்த மரத்தின் பாகங்கள் அருகில் வீடுகளின் மேல் விழாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த மரம் வேர் பகுதியில் பூச்சி அரிப்பின் காணமாக பலவீனம் அடைந்து முறிந்து விழுந்ததாக அந்த பகுதி மக்கள் கூறினார். இதனால் அந்த அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

     செய்தியாளர்.  திருவண்ணாமலை வி.முர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad