Header Ads

  • சற்று முன்

    பள்ளியில் மும்மத வழிபாட்டு ஆசியுரை மாணவ மாணவிகளுக்கு வழங்கி . தேர்வு சழைவு சீட்டு வழங்கப்பட்டது


    திருவாடானை அருகே பள்ளியில் அரசு பொது தேர்வெழுதும் மாணவ மாணவிகளுக்கு மூன்று மத குருமார்கள் ஆசியுரை வழங்கி பொது தேர்வு நுழைவு சீட்டு வழங்கப்பட்டது.

    திருவாடானை தாலுகா, சி.கே.மங்கலம் புனித பிரான்சிஸ் மேல் நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளை பொது தேர்வெழுத ஊக்கப்படுத்தும் வகையில் மூன்று மதங்களின் வழிபாடு செய்யப்பட்டு ஹால் டிக்கட் வழங்கப்பட்டது.  இந்த நிகழ்வில் மாணவ மாணவிகளின் . பெற்றோர்கள் சுலந்து கொண்டார்கள். இதில் இந்து சமய வழிபாட்டினை திருவெற்றியூர் குருக்கள் மணிகண்டசிவம் ஆசியுரை வழங்கினார். அதனை தொடர்ந்து இஸ்லாம் மத வழிபாட்டினை இமாம் செய்யது முகம்மது காசிம் ஆசியுரை வழங்கினார் அதனை தொடர்ந்து கிறிஸ்தவ மத வழிபாட்டினை அருட்தந்தை  ஜெயராஜ் ஆசியுரை வழங்கினார். அதன் பின்னர் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு ஹால் டிக்கெட்டினை பெற்றோர்களுடன் வந்து பெற்றுக் கொண்டார்கள். கடந்த ஆண்டில் இதே பள்ரியில் 10, 11. மற்றும் 12 ம் வகுப்புகளில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மணவிகளுக்கு கேடயம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளி தாளாலர் அருட்தந்தை சாமு இதயன் மற்றும் திருவாடானை காவல் சார்பு ஆய்வாளர் புவனேஸ்வரி சிறப்புரையாற்றி பரிசுகளை . வழங்கினார்கள். பள்ளியின் வளர்ச்சிப் பணிகளின் தொகுப்புரையை ஆசிரியர் அன்பு தொகுத்து கூறினார். 


    இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவகளின் பெற்றோர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவின் முடிவில் நன்றியுரை அருட்சகோதரி லீமா புஷ்பம் கூறினார். இதில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
    .

    செய்தியாளர் : திருவாடானை  -  ஆனந் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad