தேவகோட்டையில் கல்லூரி பட்டமளிப்பு விழா.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் பேருரை ஆற்றிய காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நா.ராஜேந்திரன் பட்டங்களை வழங்கினார். இவ்விழாவிற்கு கல்லூரியின் தலைவர் அண்.லட்சுமணன் செட்டியார் பட்டமளிப்பு விழாவை துவக்கி வைத்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜி.சேவியர் சேகர் வரவேற்புரை நிகழ்த்தினார். பல்கலைக்கழக துணைவேந்தர் பேசுகையில் கல்வி வளர்ச்சியையே ஒரு நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கிறது.
மேலும் கொடையில் சிறந்தது கல்வி கொடை இந்த பின்தங்கிய பகுதியில் கல்வி நிறுவனத்தை தந்ததால் வள்ளல் என்று அண்ணாமலை செட்டியார் அழைக்கப்படுகிறார். இந்த கல்லூரியில் 60% பேர் மாணவிகள் பயில்வதை வரவேற்கிறேன் என்றார். பெண் கல்வி என்பது வீட்டை மட்டும் அல்ல நாட்டையும் பேணிக்காக்கும் . மாணவ மாணவியர் பெற்றோர் ஆசிரியர்களை மதித்தல் வேண்டும். கூட்டு குடும்பம் சிதையாமல் முதியோர் நலன் பேணுதல் வேண்டும். உலக இலக்கியங்களில் மேலான இலக்கியமாக திருக்குறள் திகழ்கிறது. எனவே தான் ரஷிய அரண்மனையில் வைத்து திருக்குறள் பாதுகாக்கப்படுகிறது என்றார்.
பின்னர் பட்டம் பெற்ற 250 மாணக்கர்களுக்கும் சான்றிதழ்களை துணைவேந்தர் வழங்கினார். முன்னதாக பல்கலை கழக அளவில் முதலிடம் பெற்ற மாணவி ஐஸ்வர்யாவுக்கு தங்க பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. முதல்வர் சேவியர் வாசித்தளிப்பு பட்டமளிப்பு உறுதி மொழியை மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர். இவ்விழாவில் கல்லூரி செயலர், துணை தலைவர், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை