Header Ads

  • சற்று முன்

    பரமக்குடி சாயிபாபா ஆலயத்தில் இரவு அன்னதானம் சாப்பிட்ட பக்தர்கள் அரசு மருத்துவமனையில் சிகிக்சை


    பரமக்குடி அருகேயுள்ள தெளிச்சாத்தநல்லூர் சாயிபாபா ஆலயத்தில் இரவு அன்னதானம் சாப்பிட்ட பக்தர்களுக்கு வயிற்று போக்கு மற்றும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து 72 நபர்கள் பரமக்குடி அரசு மருத்துவமனையிலும், 29 நபர்கள் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

    பரமக்குடி அரசு முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர்.நாகநாதன் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.கலைச்செல்வி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினரின் துரித நடவடிக்கை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சையளித்தனர். இச்சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், இரவு அன்னதானத்தில் தக்காளி சாதம், காய்கறிகள் கலந்த பிரியாணி வழங்கப் பட்டதாகவும்,  இதில் தக்காளி உணவு சாப்பிட்டவர்கள் மட்டுமே  பாதிக்கப்பட்டுள்ளதாவும் தெரிய வந்துள்ளது. இது குறித்து பரமக்குடி உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் முத்துச்சாமி மற்றும் வீரமுத்து ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அன்னதானம் வழங்கிய உணவு மாதிரிகளை சேகரித்து, ஆய்வு மேற்கொண்டனர். 

    இச்சம்பவம் பரமக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்திகளை உடனுக்குடன் அறிய nms today chennal - subcribe செய்யவும் 


    எமது செய்தியாளர் : கப்டன்  - பாலா 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad