• சற்று முன்

    தமிழகத்தில் புதிய காங்கிரஸ் தலைவர் நியமனம்


    தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சி. வேணுகோபால் வெயியிட்டுள்ளார்.  மேலும் நாங்குநேரி தொகுதியின் எம்.எல்.ஏ. வசந்தகுமார், ஜெயக்குமார், எம்.கே.விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி, கடலூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர். காங்கிரஸ் சார்பில் ஒரு முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஒரு முறையும் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad