• சற்று முன்

    ஓசூரில் பட்ட பகலில் கார் கண்ணனாடி உடைத்து துணிகர கொள்ளை


    ஒசூரில் பட்டப்பகலில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து முன்பக்க இருக்கையில் வைத்திருந்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை குறித்து அந்த பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    ஒசூர் அருகேயுள்ள ராமசந்திரம் கிராமத்தை சேர்ந்த முனியப்பா என்பவரின் மகன் மூர்த்தி இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருக்கிறார். இந்த நிலையில் இன்று மூர்த்தி தனது கிராமத்திலிருந்து காரில் ஒசூர் வந்துள்ளார். குடும்ப தேவைகளுக்காக ஒசூர் பாகலூர் சாலையிலுள்ள ஒரு வங்கியில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பணம் எடுத்துள்ளார். பின்னர் பணத்தை ஒரு பையில் போட்டு காரின் முன்பக்க இருக்கையில் வைத்துள்ளார். காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு அருகிலுள்ள ஒரு கடையில் பொருட்களை வாங்க சென்றுள்ளார். 

    மூர்த்தி வங்கியில் பணம் எடுத்தை நோட்டமிட்டு அவரை பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் அவரது காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த பணப்பையை திருடி சென்றனர். கடையில் பொருட்களை வாங்கி விட்டு காரின் அருகே வந்த மூர்த்தி கார் கண்ணாடி உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சிடைந்தார். இதனையடுத்து இந்த கொள்ளை குறித்து அவர் ஒசூர் ஹட்கோ போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர்.

    அந்த பகுதியில் பல்வேறு கடைகளில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்து மூர்த்தியின் காரில் கொள்ளையடித்த மர்மநபர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் : ஓசூர் - சி. முருகன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad