Header Ads

  • சற்று முன்

    திருவாடானை அருகே குடி தண்ணிரால் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது பொது மக்கள் அச்சம்,


    திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே குளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கீழ்குடி, பூசாரியேந்தல் கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துஇந்த கிராமங்களுக்கு குத்தூர் அருகே - ஊரில் இருந்து குடிதண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் கீழ்குடியில் உள்ள மேல் தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு விநியோகிக்கப் படுகிறது.இந்த தண்ணீரை பருகுவதால் பெண்களுக்கு மலட்டு தன்மை ஏற்பட்டு குழந்தைகள் இல்லை. 


    ஆரம்பத்தில் உறவினர்கரத்குள் திருமணம் செய்வதால் தான் இவ்வாறு உள்ளது என்று நினைத்தோம். இநிலையில் இந்த தண்ணீரை பரிசோதித்து பார்தத அதிகாரிகள் தண்ணீரில் சத்து குறைபாடு ஏற்படுகிறது. என்று தெரிவித்ததை தொடர்ந்து அதிர்ச்சியுற்றதாக தெரிவித்தார்கள். இது குறித்து இப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் எங்களது கிராமத்திற்கு 15 நாட்களுக்கு ஒரு முறைதான் வருகிறது. அதுவும் போதுமானதாக இல்லை என்று தெரிவித்தார்கள். அப்படி போதுமானதாக இல்லாத குடி நீரை குடிப்பதால் பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுவதாக தெரிவித்தார்கள். இதுடுறித்து சுதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்கள்

    செய்திய்களை உடனுக்குடன் அறிய nms today youtube chenel பார்க்கவும் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad