திருவண்ணாமலையில் கால்நடை பராமரிப்பு துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாற்று திறனாளிகள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா கீழ் பரூரில் தமிழக அரசின் ஆடு வழங்கும் திட்டத்தில் 31 நபர்களுக்கு ஆடு வழங்கப்பட்டது இதில் மாற்று திறனாளிகள் கொடுத்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதுடன் அல்லாமல் ஏன் நியாயமான பயனாளிகளான எங்களுக்கு வழங்கவில்லை என அதிகாரிகளிடம் கேட்டபோது உதாசினuடுத்தி பேசியதுடன் அவமானபடுத்தி பேசியிள்ளனர் இதனால் மன உளைச்சலுக்குள்ளான மாற்று திறனாளிகள் இன்று திருவண்ணாமலை கால்நடைகள் பராமரிப்பு அலுவலகத்தின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர் தமிழ்நாடு மாற்று திறனாளிகள் சங்கம் மற்றும் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாவட்ட தலைவர் ரமேஷ் பாபு தலைமையில் நடைபெறும் இந்த முற்றுகை போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் திருவண்ணாமலை - மூர்த்தி
கருத்துகள் இல்லை