• சற்று முன்

      

    தி.மு.க. ஊராட்சி சபைக் கூட்டத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு: கீதாஜீவன் எம்எல்ஏ அறிக்கை.


    1-705611

    தூத்துக்குடி வடக்கு மாவட்டம் புதூர் மேற்கு ஒன்றியம், நாகலாபுரத்தில் 5ம் தேதி நடைபெறும் தி.மு.க. ஊராட்சி சபைக் கூட்டத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
    photo-707996

    இது தொடர்பாக தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பி.கீதாஜீவன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை : மத்தியில் ஆளும் மோடி மற்றும் தமிழகத்தில் ஆளும் எடப்பாடி ஆட்சியில் தமிழக மக்கள் படும் துயரங்களை நேரில் கண்டுகொள்ளவும், அவர்களது கோரிக்கைகளை கேட்டு அறிவதற்காகவும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகள் தோறும் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்திட வேண்டும் எனவும், அதில் கலந்து கொள்வதற்காக தலைமைக் கழகத்தால் பிரதிநிதிகளை, கழக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார்.

    தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்பி மற்றும் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ, நாமக்கல் ராஜேஷ்குமார், திருப்பூர் தங்கராஜ் ஆகியோர் ஊராட்சி சபைக் கூட்டங்களில் கலந்து மக்கள் குறைகளை கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து வருகிற 05.02.2019 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணி அளிவில் புதூர் மேற்கு ஒன்றியம், நாகலாபுரம் கிராமத்தில் நடைபெறும் ஊராட்சி சபைக்கூட்டத்திலும். மாலை 5.30 மணிக்கு நடைபெறும் நாகலாபுரம் ஊராட்சி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.எனவே நாகலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள், வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Watch nmstoday youtube and subscribe செய்யவும் . 

    செய்தியாளர் : லெனின் குமார் - எட்டயபுரம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad