ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலத்தில் மது விற்பனை அமோகம்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் தாலுகா, ஆர்.எஸ் மங்கலத்தில் காவல் நிலையம் எதிரே வடபுறம் செல்லும் பிரிவில் மது பிரியர்கள் மது குடித்துக் கொண்டிருந்தனர். தமிழகம் முழுவதும் இன்று அரசு மதுபான கடைகளுக்கு தேச தந்தை மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆர்.எஸ்'மங்கலத்தில் வழக்கம்போல் சட்ட விதிகளுக்கு புறம்பாக மது விற்பனை அமோகமாக நடைபெற்றது இதில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் குவளை வைத்து குடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு அதிகாலை முதல் 12 மணி வரை அதாவது மது பான கடை திறக்கும் வரை மதுவிற்பனை நடப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்
செய்தியாளர் : திருவாடானை - ஆனந்தகுமார்
கருத்துகள் இல்லை