Header Ads

  • சற்று முன்

    உண்மையாக உழைத்தவர்களுக்கு விருது கிடைக்கவில்லையென்று மின்வாரிய உழையர்களின் ஆதங்கம்


    குடியரசு தினத்தன்று சிறப்பாக பனியாற்றியவர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.   இச் சான்றிதழ் பெறுவதற்கு திருவண்ணாமலை மாவட்ட மின்சார வாரியத்திலிருந்து  பரிந்துரைக்கப்பட்ட ஆறு பேர்கொண்ட பட்டியலில் எந்த சிறப்பு தன்மையும் இல்லாமல், குறுகிய நோக்கோடு தமக்கு வேண்டியவர்களுக்கே பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மின்வாரியத்தில் பனியாற்றறக்கூடிய பொறியாளர்களும் தொழிலாளர்களும்  சில தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களும் அதிருப்தி அடைந்துள்ளளனர்.

    மாவட்டம் முழுவதும் ஒன்பது கோட்டங்களிலும் பனியாற்றக்கூடிய பொறியாளர்கள் தொழிலாளர்கள் பலர் கடந்த காலங்களில் நடந்த இயற்கை சீற்றம், காற்றுமழை காலங்களில் சிறப்பான மக்கள்பனியாற்றியுள்ளனர்.
    மேலும் ஒக்கிபுயல் கஜாபுயல் போன்ற இயற்கைபேரிடர் காலங்களிலும் டெல்டாமாவட்டங்களுக்கு இங்கிருந்து அனுப்பப்பட்ட பொறியாளர்கள் களப்பனியாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் காற்று மழையிலும் கடுங்குளிரிலும் சரியான உணவு கிடைக்காத சூழ்நிலைகளிலும்  கடுமையாக பனிசெய்து மக்களுக்கு மின்சாரம் வழங்கியுள்ளனர்.
    இதை அந்தமாவட்ட மக்களும் உயரதிகாரிகளும் கூட பாராட்டி யுள்ளனர் இது நம்மாவட்ட மின்வாரியநிர்வாகமும் அறிந்ததே. இப்படி என்னற்ற பொறியாளர்களும் களப்பனியாளர்களும் நேரடி மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளார்கள்.

    இவைகளையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் தி.மலை (வேங்கிக்கால்) ஒரேஇடத்திற்குள் மின்வாரிய வளாகத்துக்குள் பனியாற்றக்கூடிய ,பொதுமக்கள் நுகர்வோர் தொடர்பு இல்லாத  1)சிவில் உதவி செயற் பொறியாளர். 2)பயிற்சி மையம் உ.செ.பொறியாளர். 3)சிறப்பு பராமரிப்பு  உ.செ பொறியாளர்  4)MRT உ.செ.பொறியாளர் 5)துனை மின் நிலைய JE 6)C&IபிரிவுJE ஆகிய ஆறுபேருக்கு மட்டும் பரிந்துரைக்கபட்டுள்ளது என்பதும் இதில் களப்பனியாளர் யாரும் இல்லாததும், மேலும் இதில் பெண் ஊழியரோ பெண் பொறியாளரோ யாரும் இல்லாதது உள்நோக்கம் கொண்டதாகும். என்று எல்லோரும் கருதுகிறார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad