Header Ads

  • சற்று முன்

    செங்கத்தில் டாஸ்மாக் ஊழியர்களை சுட்டு கொள்ளை


    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பெருமுட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில் மேற்பார்வையாளர் சண்முகம் (வயது 40) மற்றும் விற்பனையாளர் லட்சுமணன் (42). இருவரும் வேலை செய்து வருகின்றனர்.
    நேற்று இரவு வசூலான 3 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு கடையை பூட்டினர். அப்போது பைக்கில் முக மூடி அணிந்தபடி 2 பேர் கடை அருகே வந்தனர். அவர்கள் திடீரென கைதுப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டு பணத்தை கேட்டு மிரட்டினர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகம் 3 லட்ச ரூபாய் பணத்துடன் தப்பி ஓடினார். அப்போது மர்மநபர் துப்பாக்கியால் சண்முகத்தின் காலில் சுட்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பணத்துடன் அங்கிருந்து உயிர் தப்பினார். இதையடுத்து அந்த நபர்கள் விற்பனையாளர் லட்சுமணனை மடக்கி பிடித்து கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சராமாரியாக தாக்கி மூடிய கடையை திறக்குமாறு மிரட்டினர். கடைக்குள் சென்று பார்த்த போது கடையில் பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் லட்சுமணனை விட்டுவிட்டு மர்ம நபர்கள் பைக்கில் தப்பி சென்றுவிட்டனர். குண்டு காயத்துடன் தப்பிய சண்முகம் செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரையும் மீட்டு செங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
    துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி விசாரணை நடத்தினார். பைக்கில் முக மூடி அணிந்து துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களா? என்று விசாரித்தனர். துப்பாக்கியால் சுட்ட இரண்டு தோட்டாக்களை சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றி தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad