• சற்று முன்

    திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளரை அக் கட்சியின் துணை பொது செயலாளர் டிடிவி . தினகரன் அறிவிப்பு


    திருவாரூர் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ்.காமராஜ் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
    அமமுக மாவட்டச் செயலாளரான எஸ்.காமராஜ், முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் தொகுதியில் இவர் மிகவும் செல்வாக்கான  நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது. .எஸ்.காமராஜ் மன்னார்குடி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளரான எஸ்.காமராஜ் சசிகலா குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். . 1981லிருந்து அதிமுக உறுப்பினராக இருந்தார். நீடாமங்கலத்தில் 2 முறை அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் ஒன்றியக்குழு தலைவராகவும் பதவி வகித்து வந்துள்ளார் . இவரின் சிறப்பான செயல்பாடு காரணமாக 2002ம் ஆண்டு ஒரு வருடம் அதிமுக திருவாரூர் மாவட்ட செயலாளராக பதவி வகித்தார்.தேர்தல் போட்டி2016 ஆம் ஆண்டு மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு எஸ் காமராஜ் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டனர். அப்போது அவருக்கு எதிராக திமுக சார்பில் எம்எல்ஏவான டிஆர்பி ராஜா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். . 2017ஆம் ஆண்டு எஸ்.காமராஜ் அதிமுக பிரிந்த போது, டிடிவி தினகரன் பக்கம் சென்றார். எஸ்.காமராஜ், சசிகலா தினகரன் ஆதரவளராக ஆனார். அப்போதில் இருந்து எஸ்.காமராஜ் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து வருகிறார்.மிகவும் வலுவானவர்இவர் திருவாரூர் தொகுதியில் மிகவும் வலுவான வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு உள்ளூர் அதரவு நிறைய இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு இவர் சிறந்த போட்டியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறார்.


    நகை மாவட்ட செய்தியாளர் : செல்வராஜ் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad