• சற்று முன்

    கோவில்பட்டியில் இரு வேறு இடங்களில் தீ விபத்து


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியையடுத்த கூசாலிபட்டியில் வைக்கோல் படப்பு மற்றும் வடக்கு செமப்புதூரில்  கரிமூட்டம் ஆகியவற்றில் தீடீரென தீப்பிடித்து எரிந்ததையடுத்து தீயணைப்புப் படையினர் சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியையடுத்த கூசாலிபட்டியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பு வீட்டருகே உள்ளதாம். அதில் தீப்பிடித்து எரிந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற கோவில்பட்டி தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இருப்பினும், வைக்கோல் படப்பு தீயில் கருகி நாசமாகின. இதைப்போன்று கோவில்பட்டியையடுத்த வடக்கு செமப்புதூர் நடுத் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். கரிமூட்டம் தொழில் செய்து வரும் இவர், வீட்டருகே இரு கரிமூட்டங்களில் தீக்கனல் போட்டிருந்த நிலையில் வைத்திருந்தாராம். இந்நிலையில் ஒரு கரிமூட்டத்தில் இருந்து தீப்பிடித்ததாம். தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். தீயணைப்புபடையினர் விரைந்து செயல்பட்டதால் பெரும் தீவிபத்துக்கள் தவிர்க்கப்பட்டது.


    செய்தியாளர் : கோவில்பட்டி -சிவராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad