Header Ads

  • சற்று முன்

    ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் வெறிசோடி காணப்பட்ட திருவண்ணாமலை வட்டாச்சியர் அலுவலகம்



    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 2003ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட முயன்றனர்.  அதை எதிர்த்து, மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அப்போது, நீதிபதிகள் கேட்டுக் கொண்டதன் பேரில் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

    தங்களது கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்று கூறி, கைவிடப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தை திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து தாலுக்காகளிலும், தி.மலை அணைணா சிலை முன்பும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும்பாலான அரசு  அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன. 

    திருவண்ணாமலை செய்தியாளர் மூர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad