Header Ads

  • சற்று முன்

    சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீரை கலெக்டர் திறந்து வைத்த காட்சி


    சாத்தனூர் அணையில் 2-ம் போக சாகுபாடிக்கு தண்ணீர் இன்று முதல் 40 நாட்களுக்கு 350 கன அடி வீதம் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் 10 ஆயிரத்து 43 ஏக்கர் 2-ம் போக சாகுபடி பாசன வசதி பெறும்

    திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணை யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணை 119 அடி கொண்டதாகும். தற்போது அணையில் 96.20 அடி தண்ணீர் உள்ளது. அணையின் இடது மற்றும் வலதுபுற கால்வாய்களில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. கலெக்டர் கந்தசாமி திறந்து வைத்து மலர்தூவி தண்ணீரை வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, செங்கம் எம்.எல்.ஏ. மு.பெ.கிரி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், சாத்தனூர் ஆணை உதவி செயற்பொறியாளர்கள் அறிவழகன், செல்வராஜீ மற்றும் மதுசூதனன், ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இன்று முதல் 40 நாட்களுக்கு 350 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு தாலுகா திருவண்ணாமலை தாலுகாவில் உள்ள 34 ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்படும் 2 ஆயிரத்து 230 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

    விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் தாலுகா, சங்கராபுரம் தாலுகாவில் 54 ஏரிகள் பாசன வசதிபெறும். இதன் மூலம் 10 ஆயிரத்து 43 ஏக்கர் 2-ம் போக சாகுபடி பாசன வசதி பெறும்.பாசன நீரை சிக்கனமாகவும் துறை பணியாளர்களின் அறிவுரைப்படியும் சிறந்த முறையில் பயன்படுத்தி நல்ல விளைச்சல் பெற்றிட எல்லா வகையிலும் ஒத்துழைக்குமாறு பாசன ஆயக்கட்டுதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    அறிவிக்கப்பட்ட தேதிக்கு மேலும் எக்காரணத்தைக் கொண்டும் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கும் தேதியை நீட்டிக்கப்படமாட்டாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருவண்ணாமலை செய்தியாளர் மூர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad