Header Ads

  • சற்று முன்

    விவசாயிகளுக்கு உடனடியாக பயிர் காப்பீட்டு தொகையை வழங்க கோரி திமுக தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்


    தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி நிலங்கள் அதிகமாக கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஆண்டு மக்காச் சோளம் பயிரிடப்பட்டு இருந்தது இந்த மக்காச்சோளம் பயிரில் படைப்பு புழுக்கள் தாக்கத்தினால் முற்றிலுமாக மக்காச்சோளப் பயிர் சேதம் அடைந்தது. இந்த சேதத்தை ஈடுபடுத்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு தமிழக அரசானது 25,000 ரூபாய் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் எனவும் விளாத்திகுளம் தாலுகா மற்றும் எட்டையாபுரம் தாலுகா ஆகிய பகுதிகளில் உடனடியாக வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி விளாத்திகுளம் ஒன்றியம் மற்றும் பேரூர் கழக திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு ஒன்றிய பொருப்பாளர்கள் ஜெயகுமார் மற்றும் சின்னமாரிமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் கலந்;துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ~ம் எழுப்பப்பட்டது. மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் நடத்திய வேலை நிறுத்த காரணத்தினால் விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் தொகை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். 

    இந்த நிலையில் பயிர்க்காப்பீடு செய்வதற்கான காலத்தை நீடித்து தர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர் மேலும் இந்த கிராம நிர்வாக அலுவலர்களின் வேலை நிறுத்தம் செய்த காரணத்தினால் விவசாயிகளுக்கு வழங்க கூடிய அடங்கல் மற்றும் இதர சான்றிதழ்களை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். பின்னர் கோரிக்கை மனுவினை தாசில்தார் உதவிளார் அவர்களிடம் வழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம் எட்டையாபுரம் புதூர் நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்

    செய்தியாளர் : கோவில்பட்டி -சிவராமலிங்கம் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad