Header Ads

  • சற்று முன்

    ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி



    ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள், இது மக்களுடைய அரசு. இது தொண்டன் ஆளும் அரசு. தலைவன் ஆளும் அரசு அல்ல என்றும் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த திமுக தமிழகத்திற்கு எந்த திட்டத்தினையும் கொண்டு வரவில்லை என்றும், திமுக குடும்ப அரசியலையும், அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவிகளுக்காக மட்டுமே பாடுபடும் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    நெல்லையில்  நடைபெறும் எம்ஜிஆரின் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டி இனாம்மணியாச்சி விலக்கில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தலைமையில் அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேசும்போது, நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். அங்கிருந்து இங்கே மேடை வந்தவன். அங்கே வெயிலில் நிற்பவர்களுக்கு எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தவன். உழைப்பாளிகளின் நன்கு உணர்ந்தவன். மற்ற கட்சி தலைவர்களை போல் அல்ல. கிராமமாக இருந்தாலும் நகரமாக இருந்தாலும் அங்கு உழைக்கின்ற மக்கள் எந்த அளவுக்கு கஷ்டப்படுகிறார்கள், அவர்களது உழைப்பினால் பிழைப்பு எப்படி உள்ளது என்பதை உணர்ந்தவன். ஆகவே இந்த அரசை எப்படி வழிநடத்தி செல்ல வேண்டும் என்பதை நன்கு உணர்ந்தவன். 


    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய செல்வாக்கால், தள்ளாத நிலையிலும் பம்பரமாக சுற்றி, மக்களை சந்தித்து, மக்களுடைய ஆதரவுடன் முதல்வராக பொறுப்பேற்றார். அந்த வகையில் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்கினார். ஆனால், அவர்கள் இருவரும் துரோகம் செய்து விட்டு சென்று விட்டனர். ஒருவர் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்றால், மக்கள் வாக்களிக்க வேண்டும். இங்குள்ள நிர்வாகிகளும், தொண்டர்களும் இரவு பகல் பாராமல் உழைத்தால் தான் சட்டமன்ற உறுப்பினராக முடியும். அதையெல்லாம் மறந்து விட்டு, யாரோ ஒருவரின் பேச்சை கேட்டு, டி.டி.வி. தினகரனின் பேச்சை கேட்டு இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும். இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டு இரண்டும் பேரும் சதி செய்தார்கள். இன்று வீதியில் நிற்கின்றனர். என்றைக்கும் தர்மம் தான் வெல்லும் என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. இந்த தேர்தல்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தயாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்  ராஜூ, அதிமுக மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்


    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம் 




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad