Header Ads

  • சற்று முன்

    கீழ்நாட்டுக்குறிச்சியில் சவுடு மண் அள்ளுவதை கண்காணிக்க கோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை அமமுக முற்றுகை


    எட்டயபுரம் வட்டம் கீழ்நாட்டுக்குறிச்சியில் சவுடு மண் அள்ளுவதை கண்காணிக்க கோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை அமமுகவினர் முற்றுகையிட்டனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் வடக்கு மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன் தலைமையில்  கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் ஜே.விஜயாவிடம் வழங்கிய மனு, எட்டயபுரம் வட்டம் கீழ்நாட்டுக்குறிச்சி கிராமத்தில் வைப்பாறு ஆற்றங்கரையையொட்டி உள்ள பயன்பாடற்ற நிலத்தில் உள்ள மேலடுக்கு சவுடு மண்ணை அப்புறப்படுத்திவிட்டு அந்த நிலத்தை விவசாயத்துக்கு பயன்படுத்த, மாவட்ட ஆட்சியர் கடந்த 10-ம் தேதி முதல் 3 மாத காலத்துக்கு அனுமதி வழங்கி உள்ளார். 
    அனுமதி வழங்கப்பட்ட நிலங்களை சுற்றி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிலங்கள் உள்ளன. சவுடு மண் அள்ள அனுமதி வழங்குப்பட்டுள்ள நிலத்துக்கு கோயில் நிலங்கள் வழியாக தான் செல்ல வேண்டும். 
    கடந்த 25 ஆண்டு காலமாக கீழ்நாட்டுக்குறிச்சிக்கு அருகே உள்ள வைப்பாற்றில் மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. ஆனால், இதுவரை கீழ்நாட்டுக்குறிச்சி கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. ஆனால், அரசு மணல் மற்றும் சவுடு மண் அள்ள மட்டும் அனுமதி வழங்கி வருகிறது. 
    சவுடு மண் அள்ள அனுமதி பெற்ற இடத்தை விட்டு விட்டு அரசு புறம்போக்கு நிலத்தில் மணல் அள்ளுகின்றனர். சவுடு மண் என்ற பெயரில் வைப்பாற்று கரையோரம் உள்ள புறம்போக்கு நிலத்தில் மண் அள்ளவே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர். மேலும், தனியார் நிலங்களுக்குள் அத்துமீறி வாகனங்கள் செல்கின்றன. எனவே, சவுடு மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள இடத்தை நில அளவீடு செய்து, எல்லை கல் ஊன்ற வேண்டும். சவுடு மண் அள்ளுவதில் முறைகேடுகள் நடக்கின்றனவா என்பதை கண்காணிக்க சமூக ஆர்வலர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.
    நூதன போராட்டம்
    இதே போல், கீழ்நாட்டுக்குறிச்சியில் மணல் கொள்ளை நடப்பதாக கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாரதிய கிசான் சங்கத்தினர் மாவட்ட தலைவர் எஸ்.ரெங்கநாயகலு, மாவட்ட செயலாளர் பி.பரமேஸ்வரன் தலைமையில் தலையில் துண்டு போட்டு முட்டிபோட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கோட்டாட்சியரிடம் வழங்கிய மனுவில், கீழ்நாட்டுக்குறிச்சியில் சவுடு மண் அள்ளுவதற்கு அரசு துறைகளால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் சவுடு மண் மற்றும் பயன்பாடற்ற மண் இருப்பதாக கூறுவது மிகப்பெரிய பொய். அப்பகுதி தரமான மணல் உள்ளது. இதனை மூடி மறைத்து, மணலை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். 

    இந்தாண்டு விளாத்திகுளம், கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்தாண்டு சராசரி மழையை விட குறைவான அளவே மழை பெய்துள்ளது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. கீழ்நாட்டுக்குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரியால், அதன் அருகே உள்ள நீர்நிலைகள், விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் உருவாகி உள்ளது. 
    எனவே, வைப்பாற்று வடிநிலப்பகுதிகளிலோ, அதன் அருகே உள்ள தனியார் நிலங்களிலோ குவரி போன்ற எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ள கூடாது. குவாரி அமைக்கும் நடவடிக்கையும் உடனடியாக நிறுத்த வேண்டும், என கூறியுள்ளனர்.

    செய்தியாளர் :  இளசை .லெனின் குமார்





    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad