ஒரே கல்லில் ஆன 64 அடி உயரம் கொண்ட பெருமாள் தற்போது திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருக்கிறது
திருவண்ணாமலை: இப்போ பெருமாள் செஞ்சியை விட்டு நகர்ந்து திருவண்ணாமலைக்கு வந்துட்டார்!!
வந்தவாசி அருகே கொரக்கோட்டையில் உள்ள மலையை செதுக்கி 64 அடி உயர பிரமாண்ட பெருமாள் சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலையை பெங்களூரில் உள்ள ஈஜிபுரா பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நிறுவப்படுகிறது.அதற்காக ஒரே கல்லில் அமைந்த பிரமாண்டமான மகாவிஷ்ணு சிலை வாகனத்தில் கொண்டு செல்ல தயாரானது. இந்த சிலையை 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் புறப்பட்டது. கிளம்பும்போதே ஏகப்பட்ட பிரச்சனைகள். வெயிட் தாங்காமல் வெடித்தன.
வீடுகள், கடைகள்
பின்னர் திண்டிவனம் அருகே உள்ள வெள்ளிமேடுப்பேட்டை அருகே வந்தபோது, சாலையின் இருபுறங்களிலும் இருந்த கடைகளை, வீடுகளை இடித்து சென்றது. பிறகு 10 நாளுக்கு முன்பு, செஞ்சி கோட்டைக்கு சிலை நுழைந்தது. ஆனால் செஞ்சிக்கோட்டை சுற்றுச்சுவரை இடித்த பின்னர் தான் எடுத்து செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டதால் திரும்பவும் சிக்கல் வந்தது. பாதை சரி செய்யப்பட்டது எனவே சிலையின் அகலத்தை குறைத்து மாற்று பாதையில் பெருமாளை கொண்டுபோனால், அங்கே இருந்த ஒரு சின்ன பாலத்தினால் மீண்டும் தடை பட்டது. பாலத்துக்கு பக்கத்திலேயே இரும்பு தகடுகள் மூலம் பாதையை சரி செய்து அதில் சிலையை எடுத்து சென்றார்கள். டயர்கள் வெடித்தன இப்போது 240 டயர்கள் கொண்ட லாரி, மெல்ல மெல்ல தனது பயணத்தை ஆரம்பித்திருக்கிறது. திண்டிவனம், சேத்துப்பட்டு, அவலூர்பேட்டை வழியாக திருவண்ணாமலைக்கு பெருமாள் வந்து கொண்டிருக்கிறார். திருவண்ணாமலை மாவட்ட எல்லையில், வேடந்தவாடி கூட்ரோடு அருகே வந்தபோது, லாரியின் டயர்கள் திரும்பவும் டமார் என அடுத்தடுத்து வெடித்தன.
வருகிறார் பெருமாள்
அதனால் நேற்று முழுவதும் அதனை சரி செய்யும் பணி நடந்தது. புதிய டயர்கள் மாற்றப்பட்டு, இன்று காலை அங்கிருந்த பெருமாள் சிலை புறப்பட்டுள்ளது. மங்கலம் வழியாக திருவண்ணாமலை வந்து கொண்டிருக்கிறார் பெருமாள்.
செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி
கருத்துகள் இல்லை