Header Ads

  • சற்று முன்

    திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் மதுக்கடையில் படுத்துகிறார் அமைச்சர் மணிகண்டன் பேச்சு


    திருவாடானையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

    திருவாடானை தாலுகா, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவவில் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் திருவாடானை ஆண்கள். பெண்கள், சின்ன கீரமங்கலம், பாண்டுகுடி, ஓரியூர், தொண்டி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசுகையில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறாரா இல்லையா என்ற பார்த்தால் இருக்கிறார் ஏதாவது ஒரு மது அருந்தும் விடுதியில் படுத்திருப்பார் அல்லது வேறு எங்காவது இருப்பார். 


    அவர் இருந்தும் எந்தப் பயனும் இல்லை.  வரும் 2019ம் ஆண்டிற்குள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளுக்கும் அமைச்சர் என்ற முறையில் செய்து வருவதாகவும், கடந்த முறை  திருவாடானை பகுதிக்கு வந்தபோது ஒரு சில கிராமங்களில் குடிதண்ணீர் இல்லை, சாலை வசதி  போன்ற கோரிக்கை வைக்கப்பட்டது அதை உடனடியாக செய்து கொடுக்கப்பட்டது. பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு மாற்று கட்சியில் சென்றுவிட்டதால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் அதனால் அந்த தொகுதிக்கும் அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். இந்த அரசு மாணவ மாணவிகளுக்கு 14 வகையான  விலையில்லா திட்டங்களை  வழங்கி வருகிறது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் செய்ய வேண்டிய கடமைகளை இந்த அரசு செய்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு விரைவில் உறுதியாக கிடைக்கும் அதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்து கொண்டாலும் இந்த அரசு மக்களுக்கு நலத்திட்டங்களை செய்து வருகிறது. தமிழகத்தில் 6 ஆயிரம் சுமார்ட் வகுப்புகள் தொடங்கபட்டுள்ளது. அனைத்திலும் கடினமான வேலை படிப்பது தான். எனக துறையின் கீழ் சிறப்பாக செயலாற்றி தமிழத்தில் பதினைஐந்தாயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை கொண்டு வந்திருக்கிறோம்.  என்று பேசினார் இந்த விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நன்றி கூறினார்.

    திருவாடானை  : செய்தியாளர்  - லெ.ஆனந்த குமார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad