Header Ads

  • சற்று முன்

    அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவி மீண்டும் மணல் கொள்ளையர்களின் அட்டகாசம்


    சீர்காழி நாதல்படுகை கரையோரத்தில் படகுகள்  மூலம் மணல் கொள்ளையில் பல ஆண்டு காலமாக ,மணல் கொள்ளை நடைப்பெற்று வந்தது இதனால் அப்பகுதி  மக்கள் பெரும் துன்பத்தில் அவதி பட்டிருந்தனர். இதனை மேல் அதிகாரிகளிடம் புகாராகவும் அப்பகுதி மக்கள் கொடுத்தனர். இருப்பினும்,அதிகாரிகள் வரும் தகவல் அடியாட்கள் மூலம்   தெரிந்துக்ண்டு தப்பித்து வடுகின்றனராம். கடந்த  12.12.2018 . அன்று,வருவாய் வட்டார அதிகாரி திருமதி.தேன்மொழி அவர்களும்,சீர்காழி வட்டாச்சியர் திரு.சங்கர்,அவர்களும்,பொதுப்பணித்துறை S.D.O .அவர்களும் கொள்ளிடம் காவல்துறை ஆய்வாளர்.திரு.முனிசேகர் .ஆகியோரின் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். அதிகாரிகள் வருவதை தெரிந்து கொண்ட   மணல் கொள்ளையர்கள் தப்பி  ஒடி ஒளிந்திருந்தனர்.  

    ஒருவார காலமாக,நாதல்படுகை மக்கள் அமையாகவும்,நிம்மதியாகவும், இருந்தனராம். மீண்டும்,யார் கொடுத்த தைரியம்யென்று தெரியவில்லை மணல் கொள்ளையர்கள்,மணல் கொள்ளையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனராம் .இவர்கள் கொலை பாதகத்துக்கு அஞ்சாதவர்களாம்,பணத்திற்காக எதையும் செய்யக் கூடியவர்களாம்.  இதனால்,மணல்கொள்ளையர்களின் பெயரை சொல்வதற்கே நடுங்குகின்றனர் அப்பகுதி மக்கள்.அதனால் இக்கொள்ளையர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து குண்டர்கள் சட்டத்தில் கைது செய்து இப்பகுதிமக்களை காக்கவேண்டும் என்கின்றனர் அப்பகுதி  அப்பாவிமக்கள்.

    செய்தியாளர்  : சீர்காழி - செல்வராஜ் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad