தூத்துக்குடி மட்டக்கடை கனரா வங்கியில் பணியாற்றி வரும் வாங்கி ஊழியர் கைது
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மட்டக்கடை கனரா வங்கியில் பணியாற்றி நகை மதிப்பீட்டாளர் சண்முகசுந்தரம் என்பவர் போலி நகைகள் மூலம் மோசடி செய்து 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் குற்றவாளி சண்முகசுந்தரத்தை நேற்று இரவு வடபாகம் காவல்துறை கைது செய்து அவரிடமிருந்து 50 லட்சத்து 15 ஆயிரம் ரூபாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் இன்று பறிமுதல் செய்த பணத்தையும் மோசடி நபர் சண்முகசுந்தரத்தையும. நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா இந்த வழக்கில் குற்றவாளியை கைது செய்துள்ளோம் மேலும் இந்த வழக்கில் வங்கி ஊழியர்கள் யாரேனும் தொடர்பு உண்டா? 22 பேர் பெயரில் போலி நகைவைக்கப்பட்டதாக கூறும் அந்த நபர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பதும் குற்றவாளி சண்முக சுந்தரத்தை காவலில் எடுத்து விசாரிக்கும் போது தெரியும் எனவும் தெரிவித்தார்.
செய்தியாளர் :சிவராமலிங்கம் - கோவில்பட்டி
கருத்துகள் இல்லை