Header Ads

  • சற்று முன்

    அரையாண்டு தேர்வினை தள்ளி வைக்க வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்



    கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் புயலுக்குப் பின்னே பள்ளிக்கூடம் திறந்து சில நாட்களே ஆன நிலையில் வரும் டிசம்பர் 10-ம் தேதி அரையாண்டு தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
    கஜா புயல் தாக்கியதில் வீடு இழந்து, உடைமைகள் இழந்து, நிர்கதியான குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் தமது  புத்தகங்கள், சீருடைகள் இழந்து பரிதவிக்கின்றனர். 


    பள்ளிக்‌கூடங்கள் அனைத்தும், புயலால் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்த படாமலும், மின்சாரம் இல்லாததால் தூய்மையான குடிநீர், சுகாதாரமான கழிப்பிடம் இன்றி இயங்க ஆரம்பித்துள்ளது. மின்சாரம், குடிநீர், கழிப்பிட வசதி முழுமை பெறாத நிலையில் பல குடும்பங்கள் தெருக்களில் வசிக்கும் அவல நிலையில் திருவாரூர் மாவட்டம் உள்ளது. இந்த அசாதாரணமான சூழ்நிலையில் மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர்வதே கேள்விக்குறியாகியுள்ளது. 


    பல்கலைக்கழகத் தேர்வுகள் எல்லாம் காலதாமதமாக நடைபெறுகிறது. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாத பள்ளிக்கல்வித்துறை மாணவர்கள் மீது கருணையின்றி அரையாண்டு தேர்வு நடத்துவதில் தீவிர கவனம் செலுத்துகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டம் மட்டுமில்லாமல் நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கும் சிறப்பு  முன்னுரிமை கொடுத்து அரையாண்டு தேர்வினை குறைந்தபட்சம் ஒரு வார காலமாவது தள்ளி வைக்க வேண்டுமென்ற ஏதிர்பார்ப்பு பெற்றோர்களிடத்தில் உள்ளது.  எனவே அரையாண்டு தேர்வினை ஒரு வார காலத்திற்கு தள்ளி வைக்க வேண்டுமென வலியுறுத்தி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் 07/12/2018 அன்று கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    இதில் மாவட்டத்தலைவர் ஜே.பி.வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் சு.பாலசுப்ரமணியன், மாவட்ட பொருளாளர் எம்.நல்லசுகம், இளைஞர் பெருமன்ற ஒன்றிய பொருளாளர் எம்.சாந்தகுமார், மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் கார்த்தி, அஜித், தமிழ்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர்  - திருவாரூர் - பாலா 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad