திருவாடானை தொண்டியில் ஹவாலா பணம் கொண்டுவந்த நபரை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருவாடானை அருகே தொண்டியில் 62 லட்சம் ஹவாலாப் பணத்தை தொண்டி சுங்கத்துரையினர் கைப் பற்றி, கொண்டு வந்தவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, எஸ்பி.பட்டிணம் பேரூந்து நிலையம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சுங்கதுரை உதவி இயக்குநர் ராஸ்குமார் மேசஸ் உத்தரவின் பேரில் தொண்டி சுங்கத்துரை துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் மற்றும் ஆய்வாளர் தர்மீந்தர் ஷா, மற்றும் பலர் வாகன சோதனையில் ஈடு பட்ட போது சென்னையில் இருந்து தொண்டிக்கு வந்த தனியார் ஆம்னி பேரூந்தை மடக்கி சோதனையிட்டனர்.
அதில் கணக்கில் வராத 62 லட்சத்து 25 ஆயிரத்து 200 ரூபாய் பணம் வைத்திருந்த தொண்டி மரைக்காயர் தெருவைச் சேர்ந்த ஹபீப்முகம்மது மகன் அப்துல் ரவூப் என்பரை கைது செய்து பணத்தை மதுரை வருமாண வரித் துறையினரிடம் ஒப்படக்க உள்ளதாக தெரிவித்தார்கள் இது பற்றி மேலும் விசாரித்து வருகிறார்கள். இந்த பணம் ஹவாலப் பணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் அறிய NMS TODAY youtube பார்க்கவும் உடனே subscribe செய்யவும்
செய்தியாளர் - திருவாடானை - லெ.ஆனந்தகுமார்
கருத்துகள் இல்லை