Header Ads

  • சற்று முன்

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் மக்களை தேடி என்ற நுதன போராட்டம்


    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் மக்களை தேடி என்ற நுதன போராட்டத்தை நடத்தி வருகின்றனர்

    திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஓன்றியம் கெஜல்நாயக்கம்பட்டி வருவாய்     ஆய்வாளர் அலுவலகம் முன்பு 40க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் முக்கிய கோரிக்கைகளாக 50% பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் அவரவர் சொந்த மாவட்டத்தில் பணிபுரிய வேண்டும்  கிராம நிர்வாக அலுவலகத்தில் மின் வசதி கழிப்பறை குடிநீர் வசதி ஆகியவற்றை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்2013ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் அனைவரும் இணையதளத்தில் சான்றிதழ் பெற்று வருவது எங்களுடைய சொந்த செலவிலே ஆகவே அதற்கான இணையதள வசதியை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்  என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அது மட்டுமின்றி உங்களின் குறைகளை மக்களிடம் எடுத்துக் கூறி மக்களை தேடி என்ற போராட்டத்தின் மூலமாக தங்களுடைய ஆதிக்கத்தை இந்த அரசாங்கத்துக்கு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    செய்தியாளர் : நித்தியானந்தம் - திருப்பத்தூர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad