Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலையில் மருத்துவ சீர்கேட்டை கண்டித்து மார்கிஸ்ட் கட்சியனர் ஆர்ப்பாட்டம்


    திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி அரசு மருத்துவமனையின் சீர்கேட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

    மருத்துவமனை அருகே செவ்வாயன்று நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு, வட்டார குழு உறுப்பினர் வி.மாணிக்கம்  தலைமை தாங்கினார், கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.பிரகலநாதன், டி.கே.வெங்கடேசன்,  வட்டார செயலாளர் கே.கே.வெங்கடேசன் மாவட்டக்குழு உறுப்பினர் பி.சுந்தர்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  தரம் உயர்த்தப்பட்டகடலாடி அசு மருத்துவமனை,  மக்களுக்கான மருத்துவ சேவையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. போதிய மருத்துவர்கள் இல்லாததால், அனைத்து நோயாளிகளையும் கவனிக்க முடியாத நிலை உள்ளது.  4 செவிலியர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 2 செவிலியர்கள் மட்டுமேத பணியில் உள்ளனர்.  அவசர சிக்க்சைக்காக வரும் நோயாளிகள், போளூர் மற்றும் திருவண்ணாமலை  மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கும் அவல நிலையே தொடர்கிறது. நோயாளிகளுக்கு உரிய மருந்து, மாத்திரைகள் அரசு மருத்துவமனையில் வழங்கப்படுவதில்லை. எனவே, அனைத்து விதமான மருத்துகளை இருப்பில் வைத்து, கூடுதலாக மருத்துவர்களையும், செவிலியர்களையும் நியமனம் செய்ய வேண்டும். சித்த மருத்துவ பிரிவிற்கு தனி கட்டிடம், கர்பினி பெண்களுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு, இரவு நேர காவலர்களை நியமிப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கைகளை எழுப்பப்பட்டது.

    செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad