Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் போராட்டம்


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள லிங்கம்பட்டி காட்டுராமன்பட்டியில் புதியதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து , முன்னாள் எம்.எல்.ஏ.ராஜேந்திரன் தலைமையில் அப்பகுதி மக்கள் , டாஸ்மாக் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் டாஸ்மாக் திறக்கப்படுவதால் விவசாய பணிகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லிங்கம்பட்டி அருகேயுள்ள வரதம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதி காட்டுராமன்பட்டி. இப்பகுதியில் உள்ள காட்டுபகுதியில் புதியதாக டாஸ்மாக் கடை திறக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று இரவு கடைகளுக்கு தேவையான மதுபாட்டில்கள்  கொண்டு வரப்பட்டன. இன்று கடை திறக்கும் நேரத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.ராஜேந்திரன் தலைமையில் அப்பகுதி மக்கள் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். புதியதாக டாஸ்மாக் திறக்கப்படவுள்ள பகுதி விவாசய நிலங்கள் அதிகமுள்ள பகுதி என்றும், இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தால் விவசாய நிலத்திற்கு விவசாயிகள், பெண்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றும், தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும் என்றும் எனவே இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுன் கலால் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். கடையை வேறு பகுதிக்கு மாற்றுவது என்று கூறியதது மட்டுமின்றி, கடை திறந்து கொண்டு வரப்பட்ட மதுபானங்கள் திருப்பி எடுத்து செல்லப்பட்டதை  தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad