பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போஸ்க்கோ சட்டம் பாய்ந்தது
செய்யாறு அருகே மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
செய்யாறு அடுத்த ராந்தம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றவர் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மாணவியின் பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் மாணவி கிடைக்கவில்லை இது குறித்து மாணவியின் தாய் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் சுரேஷ் என்பவர் மாணவியை கடத்தி சென்று பாலியில் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவியை மீட்டு சுரேசை பேக்சோ சட்டத்தில் கைது செய்தனர்
செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி
கருத்துகள் இல்லை