Header Ads

  • சற்று முன்

    நீதிமன்றத்தை அவமதிக்கும் அரசுகளை கண்டித்து, 8 வழி சாலை எதிர்ப்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


    சென்னை சேலம் இடையிலான எட்டு வழி சாலை தொடர்பான வழக்குகள் சென்னை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மீண்டும் நில ஆர்ஜிதம் செய்ய மத்திய மாநில அரசுகள் டிசம்பர் 4 ஆம் தேதியில் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கை அவமதிக்கும் விதமாக அறிவிப்பு வெளியிட்டுள்ள மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, திருவண்ணாமலையில் 8 வழி சாலை எதிர்ப்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஆட்சியரிடம் ஆட்சேபனை மனுவை அளித்தனர்



    ஆட்சேபனை மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது, தாங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம்.  தங்கள் வசிப்பிடத்தில் உள்ள விவசாய நிலங்களில், கிணறு, மரங்களும் வீடு, பம்ப்செட் ஆகியவை அமைந்துள்ளது. இதில் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம். 

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை சேலம் எட்டு வழி சாலை அமைக்கப் போவதாகவும், சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக இந்த சாலை அமைக்கப்படுவதாகவும், மத்திய அமைச்சர், முதல்வரிடம் கோப்பை ஒப்படைத்ததாக அறிய வந்தோம்.  அதன் பின்னர் ஒரு மாத காலத்தில் சிலர் எங்களது நிலத்தில் நுழைந்து, அளவீடு செய்தார்கள். பல இடங்களில் கல் நட்டனர்.  

    செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad