• சற்று முன்

    உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு வந்த லாரி கவிழ்து விபத்து


    திருவாடானை அருகே உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு சரக்கு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒட்டுநருக்கு காயம்


    திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சலையில் பழையனக்கோட்டை வலைவில் உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு போபால் மாநிலத்தில் இருந்து பெரிய இரும்பு குழாய்களை ஏற்றி வந்த பெரிய லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் லாரில் இருந்த பெரிய இரும்பு குழாய்கள் சிதறியது. நல்லவேலையாக வேறு எவ்வித அசம்பாவிதமும் இல்லை. இந்த விபத்தில் லாரியை ஓட்டிவந்த நாமக்கல் பழனியாண்டி மகன் முத்துக்குமார்(34) என்பவருக்கு காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு திருவாடானை தீஅணைப்பு படையினர் விரைந்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad