Header Ads

  • சற்று முன்

    சாயல் குடியில் தேமுதிக தேர்தல் சம்மந்தமான கூட்டம் நடைபெற்றது


    தேமுதிக தலைவர் விஜயகாந்த் உத்தரவுப்படி, கழக பொருளாளர் பிரேமலதா அவர்களின் நேரடி பார்வையில்,17/12/2018 திங்கள் மாலை 4 மணி அளவில் சாயல்குடி DSF மஹாலில் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம், பூத் கமிட்டி அமைத்தல், கழக வளர்ச்சி, தேர்தல் சம்பந்தமான ஆலோசனை ஆகியவைகள் பற்றிய நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட கழக செயலாளர் சிங்கை ஜின்னா கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் கழக நிர்வாகிகள் ஆலோசனைப்படி நிறைவேற்றப்பட்டது.

    நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பருவமழை பொய்த்துப்போனதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2018 - 2018 ஆண்டுக்கான பயிர்க்காப்பீடு தொகையை தாமதமின்றி வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நலிவடைந்த பனைத்தொழிலாளர்களின் நலனில் அக்கறையுடன் அவர்களின் வாழ்வு வளம்பெற நடவடிக்கை எடுக்கும் விதமாக இழப்பீடு மற்றும் பஞ்சத்தொகை வழங்க வேண்டும். இதேபோல் மாவட்டத்திலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக படகு உள்ளிட்ட நவீன கருவிகள் வாங்குவதற்கு அரசு மானியம் வழங்கவேண்டும். என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சிறப்பாக நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட  பொருளாளர் திலிப்காந்த், மாவட்ட கழக துணை செயலாளர்கள் கோவிந்தராஜ், சதக் அப்துல்லா, நாக்கன்னி, தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், பொதுக்குழு உறப்பினர்கள் இரமகிருஷணன், குமார், மாவட்ட கழக துணை பொறுப்பாளர் வடிவேல், ஒன்றிய கழக செயலாளரகள் கடலாடி மாணிக்கவேல், கமுதி வேல்மயில் முருகன், திருப்புல்லாணி அப்துல் ஹக்கிம், மண்டபம் (கி) தங்கபாண்டி, நகர் கழக செயலாளர்கள் இராமேஸ்வரம் முத்துக்காமாட்சி, இராமநாதபுரம் ராம்கி, கீழக்கரை பந்தே நவாஷ், கமுதி பேரூர் கழக செயலாளர் இந்திரஜித், மாவட்ட அணி நிர்வாகிகள் கேப்டன் மன்றம் முத்துப்பாண்டி, அங்குச்சாமி, இளைஞரணி சேசுமாணிக்கம், மணிகண்டன், மகளிரணி பரமேஸ்வரி, நளாவதி, தொண்டரணி ஏழுமலை, சண்முகம், விவசாய அணி அன்புமுருகன், மீனவரணி ராஜ், ரஞ்சித், தொழிற்சங்கபேரவை மேகவர்ணம், பழனி, மற்றும் கழக நிர்வாகிகள் சிறப்பாக கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad