உயிர் பாதுகாப்பு வழங்க கோரி கோவில்பட்டியில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்தில் பணியாற்றி வந்த பணியாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி விற்பனை பணத்தை கொள்ளையடித்த சமூக விரோத செயல்களை கண்டிப்பது, டாஸ்மாக் பணியாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் மாற்றுப்பணி வழங்க காலதாமதமின்றி வழங்க வேண்டும்.
விற்பனை பணத்தை வங்கியின் மூலம் எல்லா மாவட்டங்களிலும் கடைகளில் வந்து வசூலிப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். பணியாளர்களை முறைப்படுத்தி பணி பகிர்வு மாற்றம் செய்து பணியாளர்களின் நெருக்கடியான மனஉளைச்சலை நீக்க வேண்டும். பார் உரிமையாளர்களின் அராஜக செயல்களை கட்டுபடுத்த, பார் உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அனைத்து டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் பயணியர் விடுதி முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏஐடியுசி மாநில துணை தலைவர் நெல்லை நெப்போலியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் புங்கலிங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் வேல்முருகன், சிஐடியு மாவட்ட செயலாள்ர் பிரான்சிஸ் உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.
செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை