• சற்று முன்

    கோவில்பட்டியில் காவல்துறை மற்றும் காவல் நண்பர்களுக்கான பயிற்சி வகுப்பு


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காவல்துறை மற்றும் காவல் நண்பர்களுக்கு பொதுமக்கள் நல்லுறவு, சமூகவியல், போக்குவரத்து விதிகள், குற்றவியல் சட்டம், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நடவடிக்கை  தொடர்பான பயிற்சி வகுப்பு நடந்தது.

    காவல் துணை கண்காணிப்பாளர் எம்.ஜெபராஜ் தலைமை வகித்து, பொதுமக்கள் நல்லுறவு குறித்து பேசினார். கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் வி.கதிரேசன் சமூகவியல் தொடர்பாக சிறப்புரையாற்றினார். அரசு வழக்கறிஞர் சுரேஷ்குமார் குற்றவியல் சட்டம் குறித்து விளக்கினார். போக்குவரத்து விதிகள் குறித்து போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சுடலைமுத்து விளக்கமளித்தார். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நடவடிக்கை குறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கரன் பேசினார்.

    இதில் கோவில்பட்டி உட் கோட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில், இளைஞர்களிடம் இருந்து பெறப்பட்ட குறை தொடர்பான கருத்துகளை மாவட்ட கண்காணிப்பாளரிடம் பரிந்துரைத்து அவை சரி செய்யப்படும். இதில், கலந்து கொண்ட இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  மாவட்ட குற்ற ஆவணக்கூட ஆய்வாளர் கே.கஸ்தூரி, மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad