Header Ads

  • சற்று முன்

    சாகுபடிகளை சேதப்படுத்தி மின்கோபுரம் - போராட்டத்தில் தி.மலை விவசாயிகள்



    திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் குன்னுமுறிஞ்சி கிராமத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகளால் விவசாய சாகுபடி பாதிக்கப்படுவதாகவும், வேறு முறைகளில் மின் கடத்தி செல்ல வழிவகை செய்யுமாறு விவசாயிகள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

    இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வெள்ளியன்று 50 க்கும் மேற்பட்ட காவல் துறையினருடன் வந்த மின்திட்ட ஒப்பந்ததாரர்கள் விவசாய சாகுபடிகளை சேதம் செய்து மின் கோபுரம் அமைக்க முயன்றனர். அதை தடுக்க சென்ற விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குன்னுமுறிஞ்சி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், சதீஷ் குமார் ஆகிய 2 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்ட கிராமத்தினர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், விவசாயிகளின் அனுமதி இல்லாமல் விவசாயிகள் நிலங்களில் மின்வாரிய ஒப்பந்ததாரர்கள் அத்துமீறி நுழைந்து சாகுபடிகளை சேதப்படுத்தியது கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் கோரிக்கையை அலட்சியப் படுத்தும் விதமாக, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு மின்திட்ட ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக, செயல்பட்ட காவல்துறையினரின் செயல் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் விவசாயிகளை தாக்கிய போலீசாரை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சனிக்கிழமை யன்று போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.  அண்ணா சிலை முன்பு திறண்ட விவசாய சங்க நிர்வாகிகளிடம் மாவட்ட காவல்துறை அதிகாரிகள்  பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் விச மாவட்ட தலைவர்கள் வி.சுப்பிரமணி, பலராமன், சிபிஎம் தலைவர்கள் எம். சிவக்குமார், எம.வீரபத்திரன்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தை யில் காவல்துறை யினர், மாவட்ட ஆட்சியர் ஆலோசனை யின் பேரில் ,மின்கோபுரம் அமைக்கும் பணிக்கு பாதுகாப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதாக ,விவசாய சங்க தலைவர்கள் தொரிவித்தனர்


    .திருவண்ணாமலை செய்தியாளர் மூர்த்தி




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad