Header Ads

  • சற்று முன்

    முன்னால் மாணவர்களின் சாதனை - 8 லட்ச மதிப்பில் நீர் தொட்டி அமைத்து கொடுத்தனர் .


    ஓசூரில் தாங்கள் படித்த பள்ளிக்கு 8 லட்சம்,செலவில் நீர் தேக்க தொட்டிகளை அமைத்து கொடுத்த முன்னாள் மாணவர்கள், அதே பள்ளியில் படித்த முன்னால் மணிவனும் இன்நாள் அமைச்சர் திறந்து வைப்பு

    ஓசூர் RVஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பல அரசியல் தலைவர்களையும்  அரசு மருத்துவர்களையும் தொழிலதிபர்களையும் உருவாக்கி தந்துள்ளது  அதன் வரிசையில் இதே பள்ளியில் 86-87 வது கல்வியாண்டில் படித்த முன்னால் மாணவர்கள் சார்பில் தாம் படித்த பள்ளிக்கு நன்றிக்கடனாக 8 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை கட்டிக் கொடுத்துள்ளனர் இந்த நீர்த்தேக்கத் தொட்டியை  இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரும்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அவர்களை அழைத்து திறந்து வைத்தது மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்
    32 ஆண்டுகளுக்கு முன்னதாக பத்தாம் வகுப்பு பயின்ற 140 முன்னால் மாணவர்கள் சமூக வலைதளம் மூலமாக ஒருங்கிணைத்து தாங்கள் படித்த பள்ளியினை பார்வையிட்டு பள்ளிக்கான உதவியை செய்திட தலைமையாசிரியரிடம் விவரித்தபோது பள்ளி மாணவர்கள் குடிநீர் என்பது பற்றக்குறை இருப்பதாக தெரிவித்ததையடுத்து,  முன்னால் மாணவர்கள் தங்களுக்குள்ளாகவே நிதி திரட்டி 8 லட்சம் ரூபாயை கொண்டு மேல்நிலை நீர் தேக்கதொட்டியை கட்டி உள்ளனர்.

    அரசு பள்ளியில் பயின்ற முன்னால் மாணவர்களில் தற்போது வட்டார வளர்ச்சி அலுவலராக, அரசியல் தலைவர்களாக, மின்ஊழியர்,தொழிலதிபர்களாக உயர்ந்திருந்தாலும் தங்களின் தற்போதைய நிலையை மறந்து பள்ளி மாணவர்களை போன்றே சிரித்து பழைய நினைவுகளை பகிர்ந்துக்கொண்டது பார்ப்போரை நெகிழ வைத்தது பள்ளி மாணவர்களுக்காக முன்னால் மாணவர்களால் கட்டப்பட்ட நீர்தேக்கதொட்டியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர்,உள்ளிட்ட அதிகாரிகளும் முன்னாள் இந்நாள் மாணவர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

    செய்தியாளர் : சி. முருகன் - ஓசூர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad