Header Ads

  • சற்று முன்

    தமிழக அரசு சார்பில் நடக்க இருக்கும் முதலீட்டாளர் மாநாட்டில் ஶ்ரீபெரும்புதூர் தொகுதி மிக பெரிய பயனடையும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.


    சென்னை பூவிருந்தவல்லி அடுத்த தண்டலம் சவீதா பொறியியல் கல்லூரியின் மேலாண்மை துறை சார்பில் 3வது சர்வ தேச கருத்தரங்கம் நடைபெற்றது. உலகளாவிய கண்ணோட்டத்தில் மின்னணு வர்த்தக தொழில்நுட்பத்தின் கட்டமைப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளர்களாக  அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

    இந்த கருத்தரங்கில்  மாறிவரும் தொழில்நுட்ப உலகில் மின்னனு வர்தகத்தின் பங்கு மற்றும் தொழிநுட்பக் கட்டமைப்பு குறித்து மாணவர்களிடையே கலந்துரை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உலக முதலீட்டாளர் மாநாடு மிக விரைவில் நடக்கவுள்ள நிலையில்  ஶ்ரீபெரும்புதூர் பகுதி மிக பெரிய பயன் அடையும் என தெரிவித்தார்.  மிக விரைவில் மின்னனு வயல் (server farm) அமையவுள்ளது குறித்து முதல்வர் அறிவிப்பார்.   இது சம்பந்தமான நிலம் கையகப்படுத்ப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

    (server farm ) என்பது முக்கியமான விஷயம், இது வெளிநாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது தற்போது  இந்தியாவில் வராத சர்வர் ஃபார்ம் தமிழகத்தில் வர இருப்பது வரவேற்கத்தக்கது . இதனை தொழில் துறை அமைச்சர் முறையாக அறிவிப்பார்.என தெரிவித்தார்.

    செய்தியாளர் : சென்னை - ராஜன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad