• சற்று முன்

    மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி – கோவில்பட்டி விளையாட்டு மாணவர் விடுதி அணி சாம்பியன்


    கோவில்பட்டி செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியின் இறுதி போட்டியில் 4 -1 கோவில்பட்டி விளையாட்டு மாணவர் விடுதி அணி, எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தினை தட்டிச்சென்றது.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பில் கோவில்பட்டி கிரு~;ணநகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் கடந்த 2நாள்களாக நடைபெற்றது. இதில் மாவட்ட முழுவதிலும் இருந்து 13 ஹாக்கி அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்றன. இதன் இறுதி போட்டிக்கு கோவில்பட்டி விளையாட்டு மாணவர் விடுதி அணி, எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி அணிகள் தகுதி பெற்றன. 

    இறுதி போட்டி தொடங்கியது முதல் கோவில்பட்டி விளையாட்டு மாணவர் விடுதி அணி விறுவிறுப்பாக ஆடியது. ஆந்த அணி வீரர்களின் சிறப்பான ஆட்டத்தினால் அடுத்தடுத்து கோல்கள் அடித்து அணியை முன்னிலை படுத்தினர். போட்டியின் முடிவில் கோவில்பட்டி விளையாட்டு மாணவர் விடுதி அணி, 4 – 1 என்ற கோல்கணக்கில் எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தினை தட்டிச்சென்றது. மேலும் மண்டல அளவிலான ஹாக்கி போட்டியில் விளையாடவும், அந்த அணி தகுதி பெற்றது. இதன் பின்பு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி வீரர் ராமசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, முதல் 2 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.


    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad