Header Ads

  • சற்று முன்

    பழனி மலை கோயில் அடிவாரம் கிரி வீதிகளில்  சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் நடத்த அனுமதிக்க கோரி சாலையோர வியாபாரிகள் உண்ணாவிரதப் போராட்டம்


    பழனி மலைக்கோவில் அடிவாரம் திருவீதி பகுதிகளில் சாலைகளின் இருபுறமும் சாலையோர கடைகள் நடத்தி வந்ததால் பக்தர்கள் நடக்க கூட இடமில்லாமல் சிரமப்படுவதையும் நிரந்தர கட்டிடங்களில் இயங்கி வரும் பெரிய கடைகளுக்கு செல்லமுடியாமல் பக்தர்கள் அவதிப்படுவதால் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி  மதுரை உயர்நீதிமன்றத்தில் திருத்தொண்டர் சபா தலைவர்  இராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்ததில் உயர் நீதிமன்றம் அறநிலைத்துறை கோயில் பாதைகளில் இருபுறமும் சாலைகளின் ஆக்கிரமித்து நடத்திவந்த கடைகளை நிரந்தரமாக அகற்ற அறநிலைத்துறை நகராட்சி பொதுப்பணித்துறைக்கு உத்தரவு பிறப்பித்ததின் பேரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை கோயில் நிர்வாகம் அகற்றியது 

    ஆக்கிரமிப்பு கடைகள்  அகற்றியதால்  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 500க்கு மேற்பட்ட சாலையோர கடைக்காரர்கள் கடைகள் வைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி பழனி பேருந்து நிலைய ரவுண்டானா முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர் பழனி முன்னாள் நகராட்சி மன்ற தலைவரும் வழக்கறிஞருமான ராஜமாணிக்கம் தலைமையில் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் திமுக தொண்டர்கள் மற்றும் சாலையோர கடைக்காரர்கள் 300க்கும் மேற்பட்டோர்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்...

    செய்தியாளர் - பழனி - சரவணக்குமார்...


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad