Header Ads

  • சற்று முன்

    மும்பையில் நானி பல்கி வாலா நினைவு அறக்கட்டளை சார்பில் வைகோவிற்கு பணமுடிப்பும் விருதும் வழங்கப்பட்டது


    மும்பையில் நானி பல்கிவாலா நினைவு அறக்கட்டளை சார்பில் மனித உரிமைப் போராளிகளுக்கான விருது (Civil Liberties Award) வழங்கும் விழா இன்று மும்பை நரிமன் முனையில் உள்ள டாடா அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

    அனைத்து இந்திய அளவிலான இந்த விருது மதுரை மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹென்றி திபேன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.ரூ 2,50,000 பணமுடிப்பும், பாராட்டுப் பட்டயம் வழங்கினார்கள்.
    அவருக்கு வைகோ பொன்னாடை அணிவித்தார்.

    இவ்விழாவில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுஜாதா மனோகர், வரியாவா ஆகியோரும், மும்பை உயர்நீதிமன்றத்தின் முன்னணி வழக்குரைஞர்களும் பங்கேற்றனர். நிறைவாக உச்சநீதிமன்ற நீதிபதி ரோகிங்டன் நரிமன் நானி பல்கிவாலா நினைவு சொற்பொழிவு ஆற்றினார். 1 மணி நேரம் 6 நிமிடங்கள் அவர் ஆற்றிய உரையில் இந்திய அரசியல் சட்டத்தைப் பகுத்து ஆராய்ந்தார். உலக நாடுகளின் அரசியல் சட்டங்களோடு ஒப்பிட்டுப் பேசினார். திருத்தங்கள் செய்யப்பட்டதன் பின்னணியை விளக்கினார். விழா முடிவில் அவரைச் சந்தித்த தலைவர் வைகோ அவர்கள்அபாரமான உரை. நாடி நரம்புகளை ஊடுருவியது. மின்சாரத்தைப் பாய்ச்சியது. நான் வைகோ என்றார். அதற்கு நரிமன், ஓ உங்களைத்தான் தெரியுமே.. You are a famous man பிரபலமானவர் என்றார். அப்போது தலைவர் வைகோ அவர்கள் நான் பொடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது எனக்காக உங்கள் தந்தையார் உச்சநீதிமன்றத்தில் வாதாடினார். நான் விடுதலையாகி டெல்லியில் உங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது  உங்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார் என்று சொன்னபோது நன்றாக நினைவிருக்கிறது என்று நரிமன் சொன்னார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad