Header Ads

  • சற்று முன்

    பாதி எனக்கு மீதி உனக்கு என கூறிய திருநெல்வேலி மண்டல மின் ஆய்வாளர்



    ஜெனரேட்டர் அமைப்பதற்கு கிடைக்கும் மானியத் தொகையில் பாதியை லஞ்சமாகக் கேட்ட திருநெல்வேலி மண்டல மின் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் தனது லாண்டரி கடையில் ஜெனரேட்டர் வைப்பதற்கு தகுதிச் சான்று பெறுவதற்காக மின்சார வாரியத்தில் மனு அளித்துள்ளார். தகுதிச் சான்று வழங்குவது குறித்து ஆய்வுசெய்ய வந்த திருநெல்வேலி மண்டல மின் ஆய்வாளர் கிறிஸ்டோபர் சிக்னி 50,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் நாகராஜன் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஆலோசனைப்படி நாகராஜன் செயல்பட்டுள்ளார். அதன்படி இன்று லாண்டரி கடைக்குச் சென்று 8,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய நெல்லை மண்டல மின் ஆய்வாளர் கிறிஸ்டோபர் சிக்னி-யை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்

     இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ``லாண்டரி கடையில் ஜெனரேட்டர் வைப்பதற்காக நாகராஜன் லோன் கேட்டுள்ளார். மின் வாரிய அதிகாரி தகுதிச் சான்றிதழ் வழங்கினால் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜெனரேட்டருக்கு 20 சதவிகிதம் அதாவது ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் தள்ளுபடி ஆகும். தள்ளுபடி ஆகும் தொகையில் பாதிப் பணத்தை தனக்கு லஞ்சமாக கொடுக்கும்படி மண்டல மின் ஆய்வாளர் கேட்டுள்ளார். இதுகுறித்து நாகராஜன் எங்களிடம் புகார் அளித்ததன் பேரில், மண்டல ஆய்வாளர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்" என்றார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad