கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ஒரு கோடி காசோலையை முதலமைச்சரிடம் எஸ்.ஆர். எம். பல்கலைக்கழக தாளாளர் டாக்டர் பாரிவேந்தர் வழங்கினார்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நித்தியதவியாக ரூபாய் ஒரு கோடி காசோலையை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக குழுமத்தின் சார்பாக எஸ்.ஆர்.பல்கலைக்கழக தாளாளர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் இன்று மதியம் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி அவர்களை நேரில் சந்தித்து வழங்கினார்.
மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த கல்வி செம்மல் திரு டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களிலிருந்து 650 மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த சூழலில் அவர்களால் இனி கல்லூரிக்கு பணம் கட்ட இயலாது. ஆகவே இந்த மாவட்டங்களிலிருந்து பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் விலக்கு செய்யப்படுகிறது. இந்த 4 ஆண்டு கட்டண விலக்கு தொகை 48 கோடியாகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளை முதல் உணவு பொட்டலங்கள் வழங்கப்படவுள்ளன. இதை கட்சி நிர்வாகிகள் பொது மக்கள் அருகில் இருந்து வழங்க வேண்டும்...
செய்தியாளர் : பொன் முகரியன்









கருத்துகள் இல்லை