• சற்று முன்

    காதலிக்க மறுத்ததால் கத்தியால் குத்திய காமுகன்



    வள்ளியூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஜவுளிக்கடையில் தக்கலையை சேர்ந்த மெர்சி(21) என்ற இளம் பெண் விடுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.  திருக்குறுங்குடி மகிழடியை சேர்ந்த சண்முகம் மகன் ரவி(25). இன்று மாலை பஸ் நிலையம் எதிரே வந்த மெர்சியிடம் ரவி காதலிக்க வற்புறுத்தியுள்ளார். அவர் மறுக்கவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் ஓங்கி குத்தியுள்ளான். இதில் ரத்தம் அதிக அளவில் வெளியேறிய நிலையில் மெர்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad