• சற்று முன்

    நகராட்சி நிர்வாக சீர்கேட்டையும் மற்றும் சமூக விரோத செயல்களை கண்டித்து ஓசூரில் திமுகவினர் ஆர்பாட்டம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகர் வாயில் முன்பு திமுகவின் மேற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்பாட்டம்  இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்


    ஓசூர் நகராட்சி நிர்வாகத்தின் சீர்கேட்டை மற்றும் உழல் நகராட்சியை கண்டித்தும், சமூக வீரோத செயல்களையும் கண்டித்தும் . மேலும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தடுக்க தவறிய காவல்துறையை கண்டித்தும் ,ஓசூர் நகராட்சிக்குட்ப்பட்ட பகுதிகளில்  சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதை சரி செய்யாத வேடிக்கை பார்த்து வரும் ஓசூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மேலும் இராமநாயக்கன் ஏரி தண்ணீர் நிரப்புவதில் உழலை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து அங்கங்கே திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக ஓசூரிலும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சார்பில் தளி மற்றும் வெப்பணப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் ஓசூர் இராம்நகர் முன்பு சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.


    செய்தியாளர் : ஓசூர் - சி. முருகன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad